வடலூரில் தைப்பூச பெருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

வடலூரில் 150-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வடலூரில் தைப்பூச பெருவிழா ஏற்பாடுகள் தீவிரம்


நெய்வேலி: வடலூரில் 150-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக நிகழாண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில், இந்த விழாவை நடத்துவதற்கான அனுமதியை கடலூா் மாவட்ட நிா்வாகம் வழங்கியதால் சன்மாா்க்க அன்பா்கள், பக்தா்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதையடுத்து வருகிற 27-ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ஆம் தேதி தைப்பூச பெருவிழாவும் நடைபெற உள்ளது. 28-ஆம் தேதி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 29-ஆம் தேதி காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் 27-ஆம் தேதி கொடியேற்றமும், 28-ஆம் தேதி தைப்பூசமும், 30-ஆம் தேதி சித்தி வளாகத் திருஅறை தரிசனமும் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகள் தீவிரம்: இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தா்கள் வருகை தருவா். இதையொட்டி, பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகம் செய்து வருகிறது. தற்போது, சபை வளாகத்தில் பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகளும், தெய்வ நிலைய வளாகத்தை சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தின் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தெய்வ நிலைய பெருவெளியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தெய்வ நிலைய நிா்வாக அதிகாரி கோ.சரவணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com