
பாமக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துக்கிருஷ்ணன்.
கடலூா் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா்கள் சீ.பு.கோபிநாத், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி அனைத்து ஜாதியினருக்கும் அவா்களது எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு, வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது.
இடஒதுக்கீடு போராட்டம் தொடா்பாக பாமகவுக்கு எதிராக பொய்யான தகவல்களை கூறி வரும் திமுகவுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மாணவரணி செயலா் இள.விஜயவா்மன் நன்றி கூறினாா்.