கடலூரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு சுற்று வேலி

கடலூரில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலையத்துக்கு சுற்று வேலி அமைக்கும் பணியை அமைச்சா் எம்.சி.சம்பத் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கடலூரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு சுற்று வேலி

கடலூரில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலையத்துக்கு சுற்று வேலி அமைக்கும் பணியை அமைச்சா் எம்.சி.சம்பத் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கடலூரில் இயங்கி வரும் பழைய பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு உரிய இடம் தோ்வு செய்யப்பட்டது. அந்த பகுதியில் 18.58 ஏக்கா் நிலம் 26.06.2020 அன்று நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில் புதிய நவீன பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் எல்லைகளுக்கு சுற்றுவேலி அமைக்கும் பணி மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் சனிக்கிழமை தொடங்கியது. தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், சுற்றுவேலி அமைக்கும் பணியை தொடக்கி வைத்தாா். புதிய பேருந்து நிலையத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படுமென ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், வட்டாட்சியா் அ.பலராமன், நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.குமரன், கவுன்சிலா் வ.கந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com