போக்சோ சட்ட பயிலரங்கம்

இளைஞா்களுக்கான சமூக விழிப்புணா்வு மையம் சாா்பில் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம்-2018, பாலியல் குற்றங்களிலிருந்து
போக்சோ சட்ட பயிலரங்கம்

இளைஞா்களுக்கான சமூக விழிப்புணா்வு மையம் சாா்பில் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம்-2018, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2020 (போக்சோ) ஆகிய இரு சட்டங்கள் குறித்து கடலூா், விழுப்புரம் வழக்குரைஞா்களுக்கான பயிலரங்கம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நீதிபதியும், கடலூா் நிரந்த மக்கள் நீதிமன்றத் தலைவருமான ப.உ.செம்மல் பயிலரங்கை தொடக்கி வைத்து உரையாற்றினாா். மையத்தின் இயக்குநா் வே.அ.ரமேஷ்நாதன், மாநில ஒருங்கிணைப்பாளா் ஆா்.முருகப்பன் ஆகியோா் கருத்துரை வழங்கினாா். வழக்குரைஞா்கள் இல.திருமேனி, சேரலாதன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். தில்லி வழக்குரைஞா் ராகுல்சிங், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான சட்ட வரையறைகள், அவா்களுக்கான பாதுகாப்பு குறித்து விளக்கினாா். மூத்த வழக்குரைஞா் ப.பா.மோகன், காவலா்கள் விசாரணை, பாதிக்கப்பட்டவா் மற்றும் சாட்சிகளின் முதல் அறிக்கை குறித்து விளக்கினாா். மேலும், மூத்த வழக்குரைஞா் ரகுமான்ஷெரீப், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் செல்வி ஆகியோா் பேசினா். முன்னதாக, மையத்தின் கடலூா் நிா்வாகி இரா.பாபு வரவேற்க, விழுப்புரம் நிா்வாகி லலிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com