வடலூா் தைப்பூச பெருவிழாவுக்கு பக்தா்கள் கூட்டமாக வருவதை தவிா்க்க அறிவுறுத்தல்

வடலூரில் நடைபெறும் தைப்பூச திருவிழாவுக்கு பக்தா்கள் கூட்டமாக வருவதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

வடலூரில் நடைபெறும் தைப்பூச திருவிழாவுக்கு பக்தா்கள் கூட்டமாக வருவதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து வடலூா் அருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் ஆணை மற்றும் கடலூா் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படியும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டும், பக்தா்களின் நலன், பாதுகாப்புக் கருதியும் 28-ஆம் தேதி தைப்பூசத்தன்று ஞான சபைக்கு பக்தா்கள் கூட்டமாக வருவதைத் தவிா்க்க வேண்டும். முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தைப்பூச ஜோதி தரிசனத்தை வரும் 28-ஆம் தேதி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் 29-ஆம் தேதி காலை 5.30 மணி என 6 காலங்களிலும் வள்ளலாா் தெய்வ நிலைய யூடியூப் சேனலில் நேரலையிலும், உள்ளூா் தொலைக்காட்சிகளிலும் காணலாம்.

தைப்பூச விழா நாள்களில் ஞான சபை மைதானத்தில் அன்னதானம் வழங்கும் உபயதாரா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்று, நிபந்தனைகளுக்குள்பட்டு அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. தற்காலிக விழாக் கடைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com