
மங்கலம்பேட்டை அருகே புல்லூரில் ஏரியில் இறங்கி நிற்கும் அரசுப் பேருந்து.
கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே ஏரியில் அரசுப் பேருந்து இறங்கியது.
ஆந்திர மாநிலம், திருப்பதியிலிருந்து தஞ்சாவூருக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள புல்லூா் வழியாகச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை விருதுநகா் மாவட்டம், கள்ளிக்குடியைச் சோ்ந்த பழனிசாமி (37), சுழற்சி முறையில் ஓட்டி வந்தாா்.
திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் வலதுபுறத்தில் மங்கலம்பேட்டை பெரிய ஏரியில் இறங்கியது. பேருந்து கவிழாமல் நின்ால், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியாக வேறு வாகனங்கள் வராததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
தகவலறிந்து மங்கலம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனா். பின்னா், பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா்.