ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல்

மாணவர்களின் கோரிக்கையான அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதில்  சட்ட சிக்கல் உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் கோரிக்கையான அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதில்  சட்ட சிக்கல் உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் கோரிக்கையான அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கையான அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதில்  சட்ட சிக்கல் உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலூர்  மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முந்தைய இணைவேந்தர் எம்.ஏ, எம் ராமசாமி நிர்வாகத்தில், சுயநிதி முறையில் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத்தின் வைப்பு நிதியாக இருந்த பல கோடி ரூபாய் கடனாகக் கொடுக்கப்பட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் நிர்வாக மற்றும் ஊதிய செலவுகளை செய்தது போக பெற்ற கடனையும் செலுத்திவிடவேண்டும் என்பது நிர்வாக ஏற்பாடு செய்தது. ஆனால் ஒவ்வொரு வருடமும் திருப்பி தந்துவிடுகிறோம் என தொலைதூர கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழக பொது நிதியிலிருந்தும் மேலும் மேலும் கடன் பெறப்பட்டு அவை திருப்பி செலுத்தப்படவே இல்லை. பல்கலைக்கழகத்தின் நிதிநிலை சீர்கெட மருத்துவக்கல்லூரிக்கு வருடா வருடம் செலவிடப்படும் அதீத செலவு ஒரு மிக முக்கிய காரணமாக அமைந்தது.  அதனால் விபரம் தெரிந்தவர்களால் அப்போதே மருத்துவப்புலம் ஒரு White Elephant என அழைக்கப்பட்டது. மருத்துவபுலம் சுயநிதி முறையில் (Self Support) தொடங்கப்பட்டதால், எந்த அரசாங்க நிதி உதவியும் மருத்துவப்புலத்திற்கு இன்றுவரை வழங்கப்படவில்லை.

ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் நிதி நெருக்கடியில் தள்ளாட ஆரம்பிக்க, பல்கலைக்கழக நிர்வாகத்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரியை Administrator ஆக நியமித்து நேரடியாக தமிழக அரசு நிர்வகிக்க, புதிய அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டத்தை  2013 ல் தமிழக அரசு இயற்றியது. அதில் தெளிவாக இரண்டு விஷயங்கள் கூறப்பட்டிருந்தன. பல்கலைக்கழக இணைவேந்தராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் இருப்பார். துணைவேந்தர் பதவி இப்போது காலியாக உள்ளது. மீதி உள்ள துணைவிதிகள் அனைத்தும் முந்தைய சட்டத்தில் உள்ள நிலையிலேயே தொடரும் என்பதுதான் அது. அதன்படி, மருத்துவப்புலம் self support- (மாணவர்களிடம் முழு செலவையும் கட்டணமாக வசூலித்தே ) நிலையிலேயே தொடர்ந்தது. மருத்துவப்படிப்புகளுக்கு ஆகும் செலவை துல்லியமாக கணக்கிட்டு, அதன்படி மருத்துவப்படிப்புகளுக்கான கட்டணத்தை பல்கலைக்கழக சிண்டிகேட் நிர்ணயம் செய்தது.

இதனை எதிர்த்து மாணவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள் பல்கலைக்கழக நிதிச் சிக்கலை தீர்க்க உதவிக்கு வந்த அரசிற்கு இரட்டை சாட்டையடி தரக்கூடாது. பல்கலைக்கழகம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை. அரசை சுயநிதியில் ஆரம்பித்த கல்லூரிகளில் நடத்துவதற்கான செலவுகளை ஏற்க சொல்வது நியாயம் இல்லை. தெளிவாக, மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு முன்பே Prospectus ல் போடப்பட்ட கட்டணத்தைத்தான் கேட்கிறார்கள். பல்கலைக்கழக சிண்டிகேட்டிற்கு கட்டணம் நிர்ணயக்க உரிமை உண்டு என தீர்ப்பளித்தது. அரசு கல்லூரிகளுக்கு Fees Fixation Committee கட்டணம் நிர்ணயம் செய்வதில்லை எனவும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சுயநிதி படிப்பு என்பது தனியார் நிர்வாகம் போல்தான். இதனை அரசு நிர்வாகமாக கருதமுடியாது.எனவே Fees Fixation கமிட்டி மட்டுமே கட்டணத்தை நிர்ணயிக்க முடியும் என மாணவர்கள் நீதிமன்றத்தை கேட்டனர். நீதிமன்றம் மாணவர்களின் வாதத்தை ஏற்று, பீஸ் பிக்சேஷன் கமிட்டியிடம் கட்டணத்தை நிர்ணயிக்க சொன்னது. மாணவர்களின் கோரிக்கை படி கட்டணம் நிர்ணயம் செய்யும் கமிட்டி நிர்ணயித்த கட்டணம்தான் இப்போது நடைமுறையில் உள்ள கட்டணம் ஆகும்.  அதனை Prospectus லேயே தெளிவாக போட்டுள்ளனர். மாணவர் சேர்க்கை மருத்துவக் கவுன்சிலிங்கிலும் இந்த கட்டணம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் சி.சுப்பிரமணியன் தெரிவித்தது: பல்கலைக்கழக நிர்வாகம் நிர்ணயத்தை கட்டணத்தை ஏற்றுக் கொண்ட மாணவர்கள்தான் இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்தனர். இவர்களை இந்த கட்டணத்தில் இங்கு சேருமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை. சுயவிருப்பத்தின் பேரில் இந்த கட்டணத்தை கட்ட வசதியுள்ளவர்களே இந்த கல்லூரியை தேர்வு செய்தனர். இவர்கள் எடுத்த மதிப்பெண்ணுக்கு இதை விட குறைவான கட்டணத்தில் வேறு எங்கேனும் மருத்துவ படிப்பு கிடைத்திருந்தால் அவர்கள் தாராளமாக அங்கே போய் சேர்ந்திருக்கலாம். இவர்களே இவர்கள் மதிப்பெண்ணுக்கு இந்தக் கட்டணத்தில் தான் மருத்துவ படிப்பு கிடைக்கும் என்பதனால்தான் இங்கு சேர்ந்தனர். மாணவர்களும் பெற்றோர்களும் பாண்டு பேப்பரில் இந்த கட்டணத்தை கட்டுகிறோம் என பல்கலைகழகத்துக்கு எழுத்துபூர்வமாக உறுதிமொழி அளித்துள்ளனர். உண்மையில் கட்டணம் கட்ட முடியாதவர்களுக்கு அரசு உதவலாம். வங்கி கடன் கூட ஏற்பாடு செய்து தரலாம். உச்சநீதிமன்றம் கூட இந்த கட்டணம் நியாயமானதே என்றும், இந்தக் கட்டணத்தை மாணவர்கள் கட்ட வேண்டும் என தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. தற்போது தமிழகஅரசு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அறிவித்துள்ளது. ஆனால் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. எனவே இந்த சட்ட சிக்கலை நீக்க தமிழகஅரசு விரைந்து அரசாணை பிறப்பித்து இனி வரும் காலங்களில் அரசு கல்வி கட்டணத்தை வசூலிக்கவும், மருத்துவமனையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனபதே பொதுமக்களின் கோரிக்கையாகும் என்கிறார் பேராசிரியர் சி.சுப்பிரமணியன்.

மேலும் பல்கலைக்கழக முன்னாள் ஆளவை உறுப்பினர் தில்லை சீனு தெரிவித்தது: தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையாக அறிவிப்பை வெளியிட்டார். எனவே தமிழகஅரசு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொடரில் சட்டம் நிறைவேற்றி அரசாணை பிறப்பித்து, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாக முழுமையாக ஏற்று, மாணவர்களுக்கு அரசு  கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமித்து, உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனை மேம்படுத்த வேண்டும் என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com