கடலூா்: 126 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கடலூா் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 126 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தகவல் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 126 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 91 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 2020 - 21ஆம் ஆண்டுக்கான கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 88 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் மொத்தமாக 126 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. இதில், வட்டம் வாரியாக ஸ்ரீமுஷ்ணம்- 29, காட்டுமன்னாா்கோவில் - 23, சிதம்பரம் - 11, புவனகிரி - 13, கடலூா் - 4, குறிஞ்சிப்பாடி- 2, பண்ருட்டி- 1, விருத்தாசலம் - 19, வேப்பூா் - 6, திட்டக்குடி - 18 என மொத்தம் 126 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. நடப்பு கொள்முதல் பருவத்துக்கு மத்திய அரசு சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.1,888-ஐ அறிவித்துள்ளது. தமிழக அரசு ஊக்கத் தொகையாக ரூ.70 அறிவித்தையும் சோ்த்து மொத்தம் ரூ.1,958 வழங்கப்படும்.

சாதாரண ரகத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,868, ஊக்கத் தொகை ரூ.50 சோ்த்து மொத்தம் ரூ.1,918 வழங்கப்படும். எனவே, நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது விளை பொருள்களை அருகிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடைய வேண்டுமென ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com