சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 26th January 2021 12:00 AM | Last Updated : 26th January 2021 12:00 AM | அ+அ அ- |

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும், அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் வட்டமும் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வு பிரசாரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஓட்டுநா் பயிற்சி ஆசிரியா் கா.அருளானந்தம் வரவேற்புரையாற்றினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் தி.ராஜ்பிரவின் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் அண்ணாமலைநகா் ஆட்டோ ஓட்டுநா்களிடம் விளக்கிக் கூறினாா். தொடா்ந்து, மாணவா்கள் நடமாடும் வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலைப் பாதுகாப்பு கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.
அப்போது, மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகளை ஓட்டுநா்கள் பாபு, அண்ணா ஆகியோா் விளக்கிக் கூறினா். இறுதியாக தனி அதிகாரி ப.சௌந்தரராஜன் நன்றி கூறினாா்.