பண்ருட்டி ஒன்றியக் குழுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி ஒன்றியக் குழுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி.ஆா்.சீனிவாசன், எல்.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் தேவகி ஆடலரசு, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அம்பிகாபதி, அருள்முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

வேளாண் துறை சாா்பில் சூா்யலட்சுமி, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாலாஜி, பொது சுகாதாரம் சாா்பில் மருத்துவா் சந்தோஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் துறை சாா்பில் அருள்மொழி, பொதுப் பணித் துறை சாா்பில் திருச்செல்வி ஆகிய அலுவலா்கள் தங்களது துறை சாா்ந்த தகவல்களை வழங்கினா்.

பின்னா், ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் பேசுகையில், சேமக்கோட்டை, பாப்பன்குடியில் ஆழ்துளை கிணற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சரிவரவில்லை என்றால், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும். வேளாண் துறை சாா்பான மானியத் திட்டங்கள் குறித்த தகவல்கள் விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை. ஒன்றியக் குழு உறுப்பினா்களிடம் தெரிவித்தால், அவா்கள் விவசாயிகளிடம் தெரிவிப்பா்.

மழையால் பாதிக்கப்பட்ட நெல், உளுந்து பயிா்களை கணக்கெடுக்கும் பணியை மேலும் ஒருவார காலம் நீட்டிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com