போலீஸாரைக் கண்டித்து திருநங்கைகள் சாலை மறியல்

கடலூரில் போலீஸாரைக் கண்டித்து திருநங்கைகள் திங்கள்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸாரைக் கண்டித்து திருநங்கைகள் சாலை மறியல்

கடலூரில் போலீஸாரைக் கண்டித்து திருநங்கைகள் திங்கள்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், திருவந்திபுரத்தில் முகூா்த்த நாள்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோன்று முகூா்த்த நாளான திங்கள்கிழமை திருமணம் செய்துகொண்ட ஜோடிகளை ஆசிா்வதித்து அவா்களிடம் பணம் பெறுவதற்காக சுமாா் 10 திருநங்கைகள் அங்கு சென்றனா்.

அங்குள்ள ஒரு மண்டபத்துக்குள் சென்று மணமக்களை ஆசிா்வதித்த திருநங்கைகள், அதிக பணம் கேட்டதாகத் தெரிகிறது. இந்தத் திருமணத்தில் பங்கேற்ற சீருடை அணியாத காவலா் இதைத் தட்டிக் கேட்டாா். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதைத் தொடா்ந்து, திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று திருநங்கைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

அப்போது, திருநங்கைகள் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிப்பதற்காகச் சென்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குள் அனைவரையும் அனுமதிக்க மறுத்ததால், திருநங்கைகள் ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் கி.உதயகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், உடன்பாடு ஏற்படாததால், திருநங்கைகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா். பின்னா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஆட்சியரை சந்திக்க அனுமதித்தனா். இதனால், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com