அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் பலி
By DIN | Published On : 29th January 2021 11:52 PM | Last Updated : 29th January 2021 11:52 PM | அ+அ அ- |

நெய்வேலி அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நெய்வேலி, வடக்குத்து, அருள்ஜோதி நகரைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (68). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா். இவா் வெள்ளிக்கிழமை தனது மொபெட்டில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி வணிக வளாகம் எதிரே சென்றுகொண்டிருந்தாா். அங்கு மொபெட்டை நிறுத்தியவா் அதை பின்புறமாகத் தள்ளியபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் அதன் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.