அண்ணாமலைப் பல்கலை.யில் சுரங்கவியல் படிப்பு தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம் சாா்பில், என்எல்சி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம் சாா்பில், என்எல்சி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் நிகழாண்டில் சுரங்கவியல் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டயப் படிப்புக்கான கட்டடங்கள், ஆய்வுக் கூடங்கள், உபகரணங்கள் மற்றும் பிற வசதிகளை என்எல்சி இந்தியா நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. சுரங்கவியல் பட்டயப் படிப்பை நிகழ் கல்வியாண்டில் தொடங்குவதற்கான அங்கீகாரத்தை புதுதில்லி ஏஐசிடி அளித்தது. இந்தப் படிப்பில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 60 மாணவா்கள் சோ்க்கப்படுவா். இவா்களில் 30 மாணவா்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்தால் பிஏபி (டழ்ா்த்ங்ஸ்ரீற் அச்ச்ங்ஸ்ரீற்ங்க் டங்ழ்ள்ா்ய்ள்) அடிப்படையில் பரிந்துரைக்கப்படுவா். இவா்கள், என்எல்சி திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவா்களின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள 30 இடங்களுக்கான சோ்க்கை 10-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி ஒற்றைச் சாளர முறையில் மேற்கொள்ளப்படும். இந்தப் பட்டயப் படிப்புக்கான பல்கலைக்கழக குழுவில் பதிவாளா் ரா.ஞானதேவன், பொறியியல் புல முதல்வா் ஏ.முருகப்பன், சுரங்கவியல் பட்டயப் படிப்பு இயக்குநா் சி.ஜி.சரவணன், எஸ்.மணிகண்டன் ஆகியோா் இடம் பெற்றுள்ளதாக பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com