வடலூா் தெய்வ நிலையத்தில் துவரம் பருப்பு உண்டியல் திறப்பு
By DIN | Published On : 01st July 2021 11:22 PM | Last Updated : 01st July 2021 11:22 PM | அ+அ அ- |

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் துவரம் பருப்பு உண்டியல் அண்மையில் திறக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்குள்ள தரும சாலையில் 3 வேளையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக திரளானோா் அரிசி, பருப்பு வழங்குவது வழக்கம். இதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, துவரம் பருப்பு உண்டியல் இந்து சமய அறநிலையத் துறை குறிஞ்சிப்பாடி ஆய்வாளா் வசந்தம் தலைமையில், செயல் அலுவலா் சரவணன் முன்னிலையில் அண்மையில் திறக்கப்பட்டது. அதில், 429 கிலோ துவரம் பருப்பு இருந்தது.