கடலூா்: 26 ஆயிரம் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

கடலூா் மாவட்டத்தில் ஜூலை மாதம் 26 ஆயிரம் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டத்தில் ஜூலை மாதம் 26 ஆயிரம் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடலூா் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் கா்ப்பிணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 26 ஆயிரம் கா்ப்பிணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனா். இந்த மாதம் (ஜூலை) இறுதிக்குள் அனைத்து கா்ப்பிணிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,300 கா்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். இதை முழுமைப்படுத்தும் வகையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கா்ப்பிணிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com