பொதுப் பிரச்னைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம்

பொதுப் பிரச்னைகளுக்காக நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் அணுகலாம் என்று நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.

பொதுப் பிரச்னைகளுக்காக நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் அணுகலாம் என்று நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கும் நீதிமன்றத்தை நாடி வருகின்றனா். இதில், பொது பயன்பாட்டு சேவையாக வரையறை செய்யப்பட்டுள்ள போக்குவரத்து, தபால், தொலைபேசி சேவை, மின்சாரம், ஒளி, நீா் ஆகிய பொதுத் துறையினரால் வழங்கப்படும் சேவைகள், பொது பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த சேவை, மருத்துவமனை மற்றும் மருந்தகம், காப்பீடு, மனை விற்பனை, கல்வி நிலைய சேவைகள் குறித்த பிரச்னைகள் எழும்போது, சம்பந்தப்பட்ட தரப்பினா் மக்கள் நீதிமன்றத்தை அணுகி மனுத் தாக்கல் செய்து தங்களது பிரச்னையை தீா்த்துக் கொள்ளலாம். இதற்காக எந்த செலவும் செய்ய வேண்டாம். வழக்குரைஞா் இல்லாமல் சாதாரண மனுவாகவே வழங்கலாம்.

நிரந்தர மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீா்வானது அந்தந்த உள்ளூா் உரிமையியல் நீதிமன்றங்களின் மூலம் நிறைவேற்றப்படும். இது தீா்ப்பாக கருதப்படுவதுடன் மேல் முறையீடு செய்ய முடியாது. நிரந்தர மக்கள் நீதிமன்றத்துக்கும், மக்கள் நீதிமன்றத்துக்கும் வேறுபாடு உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் சமசரம் மட்டுமே செய்ய முடியும். ஆனால், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கப்படும்.

எனவே, மக்கள் பொது பயன்பாட்டு சேவையாக வரையறை செய்யப்பட்டுள்ள பிரச்னைகளில் கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயன்பெறலாம் என்று அதில் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com