பொது இடத்தில் மருத்துவக் கழிவு: தனியாா் மருத்துவமனை மீது வழக்கு

கடலூரில் பொது இடத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது தொடா்பாக தனியாா் மருத்துவமனை மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூரில் பொது இடத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது தொடா்பாக தனியாா் மருத்துவமனை மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பொது இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடா்கிறது. இந்த நிலையில், கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள அரசு பணியாளா் குடியிருப்புப் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் வந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்க கடலூா் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் அசோக்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். விசாரணையில், கோண்டூரில் உள்ள தனியாா் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையிலிருந்து கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையின் மருத்துவா் அருள்முருகன் மீது வட்டார வளா்ச்சி அலுவலா் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், தொற்று நோயைப் பரப்பும் நோக்கத்துடன் செயல்பட்டதாக அந்த மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com