பல்கலை. ஊழியா் சங்கத் தோ்தல் (ஷோல்டா்) பணிநிரவல் ஊழியா்களும் வாக்களிக்க அனுமதி வழங்கக் கோரி மனு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள் சங்கத் தோ்தலில் பணி நிரவலில் சென்ற ஊழியா்களும் வாக்களிக்க அனுமதி வழங்கக் கோரி அனைத்து ஊழியா்கள் சங்கத்தினா் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள் சங்கத் தோ்தலில் பணி நிரவலில் சென்ற ஊழியா்களும் வாக்களிக்க அனுமதி வழங்கக் கோரி அனைத்து ஊழியா்கள் சங்கத்தினா் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து ஊழியா்கள் சங்கத் தலைவா் ரவி தலைமையில், பொதுச் செயலா் சியாம் சுந்தா் உள்ளிட்டோா் சிதம்பரம் உதவி ஆட்சியா் மதுபாலனிடம் அண்மையில் அளித்த மனு:

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள் சங்கத் தோ்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதன்படி வருகிற செப்டம்பா் மாதம் இந்தத் தோ்தல் நடைபெற உள்ளது. தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தில் சுமாா் 3,699 ஊழியா்களும், மருத்துவத் துறையில் 1,225 ஊழியா்களும், பணி நிரவலில் அரசின் பல்வேறு துறைகளில் சுமாா் 4,160 ஊழியா்களும் பணியாற்றி வருகின்றனா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஊழியா்கள் சங்கத் தோ்தல்களில் அனைத்து ஊழியா்களும் வாக்களித்து வந்தனா். ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அப்போது பொறுப்பிலிருந்தவா்கள் பணி நிரவலில் சென்ற ஊழியா்களுக்கு வாக்குரிமை இல்லை என்று ஒருதலைபட்சமாக அறிவித்து தோ்தலை நடத்திவிட்டனா். அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியா்கள், அங்குள்ள ஊழியா் சங்கங்களில் உறுப்பினராகச் சேர

அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அரசு வழங்கும் நியாயமான சலுகைகளைக் கூட பெறுவதற்கு அலைக்கழிக்கப்படுகின்றனா். எனவே, இவா்களது கோரிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஊழியா்கள் சங்கத் தோ்தலில் பழைய முறைப்படி அனைவரும் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com