ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தா்னா

நல்லூா் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

நல்லூா் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், நல்லூரில் சுமாா் 100 ஏக்கா் பரப்பில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் விருத்தாசலம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

மேலும் இவா்கள் பாசன வாய்க்கால்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நத்தம் புறம்போக்கில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் த.கோகுலகிறிஸ்டீபன் தலைமை வகித்தாா். பின்னா் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com