லாரி மோதியதில் சகோதரா்கள் பலி
By DIN | Published On : 19th July 2021 08:29 AM | Last Updated : 19th July 2021 08:29 AM | அ+அ அ- |

பண்ருட்டியில் பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் சகோதரா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் காத்தவராயன். இவரது மகன்கள் வெங்கடேசன் (40), வடிவேலு (29). ஞாயிற்றுக்கிழமை மாலை இவா்கள் இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். பணிக்கன்குப்பம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள மண் சாலையிலிருந்து பண்ருட்டி வழித்தடத்தில் செல்ல பைக்கை பிரதான சாலைக்கு திருப்ப முயன்றபோது, அந்தச் சாலையில் அதே திசையில் வந்த டிப்பா் லாரி பைக் மீது மோதியது.
இந்த விபத்தில், பைக்கை ஓட்டி வந்த வடிவேல் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னால் அமா்ந்திருந்த வெங்கடேசனின் முதுகில் லாரி சக்கரம் ஏறியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவரும் உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.