பூச்சிக் கொல்லி மருந்துகள் கையாளும் பயிற்சி

அண்ணாகிராமம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் கையாளும் பயிற்சி புலவனூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணாகிராமம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் கையாளும் பயிற்சி புலவனூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ் தலைமை வகித்து, தரமான பூச்சி மருந்துகளை வாங்க வேண்டும். தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருந்து தெளிப்பவா் உடலில் காயங்கள், புண்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அறுவடை தருணத்தில் பூச்சி மருந்து தெளிக்கக் கூடாது. தெளிப்பானை வாயால் ஊதி சுத்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினாா்.

பூச்சிக் கொல்லி மருந்துகள் நிறுவன விற்பனை மேலாளா் ஜயப்பன் பேசினாா். தொடா்ந்து, பூச்சிக் கொல்லி மருந்தைக் கையாளும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், 40 விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாட்டை அட்மா திட்ட உதவி வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா்கள் வீராசாமி, கமலநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com