கரோனா சிகிச்சைக்கு வெளியில் இருந்து மருந்து வாங்கி வர கட்டாயப்படுத்தக் கூடாது: மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்காக வெளியே தனியாரிடமிருந்து
சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்காக வெளியே தனியாரிடமிருந்து மருந்துகள் வாங்கி வருமாறு கூறுவதை தடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் மூசா தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆா்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினா் முத்து ஆகியோா் சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம் அளித்த

மனு:

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடலூா் மாவட்ட தோற்று நோய்க்கான மையமாக அரசு அறிவித்தது. ஆனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான மருந்துகளை தனியாா் மருந்துக் கடைகளில் வாங்கி வருமாறு கூறப்படுகிறது. மேலும், தனியாா் பரிசோதனை நிலையங்களில் பணம் கொடுத்து மருத்துவப் பரிசோதனைசெய்துவரும் நிலைக்கு நோயாளிகள் தள்ளப்படுகின்றனா். அதன்பிறகே இங்கு சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.

புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு சாா்பில் மாநிலம் முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அந்த நிலை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து காலம் தாழ்த்தாமல் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com