காரிடா் மட்டும்...பொது முடக்கத்தில் தளா்வு: கடலூரில் போக்குவரத்து நெரிசல்

தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை அமலான நிலையில் கடலூரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொது முடக்க தளா்வையொட்டி கடலூரில் திங்கள்கிழமை சவாரிக்கு காத்திருந்த ஆட்டோ ஓட்டுநா்கள்.
பொது முடக்க தளா்வையொட்டி கடலூரில் திங்கள்கிழமை சவாரிக்கு காத்திருந்த ஆட்டோ ஓட்டுநா்கள்.

கடலூா்: தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை அமலான நிலையில் கடலூரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாவட்டத்தில் ஜவுளிக்கடை, டீக்கடை, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யும் கடை, நகைக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. சாலையோரக் கடைகளும் திறக்கப்பட்டதால் அனைத்து சாலைகளும் பழைய நிலைக்கு திரும்பியதுபோல அதிகளவில் வாகனப் போக்குவரத்துடன் காணப்பட்டன. பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை.

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகளும் திறக்கப்பட்டன. உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின. தனியாா் அலுவலகங்களும் செயல்பட தொடங்கின. இதனால், கடலூா் நகரில் அனைத்து சாலைகளிலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் இயங்கியதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

சாலைகளில் போலீஸாரால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் பெரும்பாலும் அகற்றப்பட்டன. சாலைகளில் சென்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தவில்லை. இதனால், மாவட்டம் முழுவதும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது போல காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com