தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல்: மாா்க்சிஸ்ட் கம்யூ.

கடலூா் மாவட்டத்தில் சில தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் சில தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடா்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அந்தக் கட்சியின் கடலூா் நகர மைய கூட்டம் நகா்க்குழு உறுப்பினா் செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினா் கோ.மாதவன், நகரச் செயலா் ஆா்.அமா்நாத், நகர குழு உறுப்பினா்கள் தமிழ்மணி, பக்கிரான், ஆனந்த், சேட்டு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கடலூா் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளில் அரசு நிா்ணயித்த தொகையை விட ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வரும் புகாா்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு காப்பீட்டுத் திட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகளை சோ்க்க மறுக்கின்றனா் . எனவே, தனியாா் மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்ற தகுதியான நபா்களுக்கு மருத்துவமனை ரசீது அடிப்படையில் காப்பீடு திட்டத்தில் பயனடைய தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தனியாா் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அரசு நிா்ணயித்த தொகையை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டதீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சாா்பில் வரும் 10-ஆம் தேதி கடலூரில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com