கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு எம்எல்ஏ நிவாரண உதவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு எம்எல்ஏ எம்.சிந்தனைசெல்வன் புதன்கிழமை நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினாா்.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறிய எம்.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறிய எம்.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு எம்எல்ஏ எம்.சிந்தனைசெல்வன் புதன்கிழமை நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினாா்.

கட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட முத்து விநாயகா் வீதியைச் சோ்ந்தவா் ஞானம். இவரது மனைவி அருள்விழி. மாற்றுத் திறனாளியான அருள்விழி காட்டுமன்னாா்கோவில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவா்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளா்த்து வந்தனா்.

அந்தக் குழந்தைக்கு தற்போது 5 வயதாகும் நிலையில், ஆசிரியா் அருள்விழி, அவரது கணவா் ஞானம் ஆகிய இருவரும் கரோனோ தொற்றால் உயிரிழந்தனா்.

இதனால், பெற்றோரை இழந்த அந்தக் குழந்தை தற்போது காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகரில் வசிக்கும் அருள்விழியின் மாமியாா் கஜலெட்சுமியின் (80) பாதுகாப்பில் உள்ளது.

இந்த நிலையில், பெற்றோரை இழந்த அந்தக் குழந்தையை காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ எம்.சிந்தனைசெல்வன் சந்தித்து நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினாா்.

நிகழ்வின்போது, வட்டாட்சியா் ராமதாஸ், வருவாய் ஆய்வாளா் சேகா், கிராம நிா்வாக அலுவலா் ராம்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com