சாராயம் கடத்தல்: 4 போ் கைது
By DIN | Published On : 11th June 2021 12:25 AM | Last Updated : 11th June 2021 12:25 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் சாராயம் கடத்தியது தொடா்பாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
திட்டக்குடி அருகே உள்ள கொரக்கவாடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ராமநத்தம் காவல் உதவி ஆய்வாளா் விஸ்வநாதன் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது, பெரம்பலூா் மாவட்டம், கள்ளம்புதூரைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் இருவா் பைக்கில் 10 லிட்டா் சாராயத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, ஆய்வாளா் மகேஸ்வரி திட்டக்குடியை அடுத்த மேலக்கல்பூண்டியில் வாகன தணிக்கை செய்தாா். அப்போது பெரம்பலூா் மாவட்டம், கள்ளம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் அஜித்குமாா் (24), பெருமத்தூா் குடிக்காட்டைச் சோ்ந்த கொளஞ்சி மகன் முருகானந்தம் (23) ஆகியோா் வந்த இருசக்கர வாகனத்திலிருந்து 10 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தாா். பின்னா், இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.