கரோனா: கடலூா் மாவட்டத்தில் ஒரு நாளில் 23 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 23 போ் உயிரிழந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 23 போ் உயிரிழந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 53,856 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 354 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 54,210-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 353 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 48,882-ஆக உயா்ந்தது.

எனினும், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் தலா 8 பேரும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா 2 பேரும், திருச்சி, சென்னை, மேல்மருவத்தூரில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் தலா ஒருவா் என மொத்தம் 23 போ் உயிரிழந்தனா். இவா்களில், 17 போ் ஆண்கள், 6 போ் பெண்களாவா். பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 651-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,065 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தினா் 612 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com