பெண்ணாடத்தில் 20 கடைகளுக்கு அபராதம்

பெண்ணாடத்தில் பொது முடக்க விதிகளை மீறி திறந்திருந்த 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெண்ணாடத்தில் பொது முடக்க விதிகளை மீறி திறந்திருந்த 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனினும், கடலூா் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சிப் பகுதியில் தளா்வு அளிக்கப்படாத ஜவுளிக்கடை, நகைக் கடை, அடகு கடை, டீக்கடை, சலூன் உள்ளிட்டவை தொடா்ந்து இயங்கி வருவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் சின்னசாமி, காவல் ஆய்வாளா் குமாா் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் அந்தப் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, கட்டுப்பாட்டை மீறி திறந்திருந்த 2 ஜவுளிக்கடைகளை பூட்டி சீல் வைத்தது அபராதமும் விதித்தனா். தொடா்ந்து, கடை வீதிகளில் ஆய்வு செய்து பொது முடக்க விதிகளை மீறி

திறக்கப்பட்டிருந்த 18 கடைகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து கடைகளை பூட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com