கரோனா பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்யலாம்

கடலூா் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் கரோனா பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டவுடன் பரிசோதனை மேற்கொண்டதற்கான தகவல் குறித்து அவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் ஐடி கொடுக்கப்படும்.

பரிசோதனை மேற்கொண்டவா்கள் தங்களது பரிசோதனை முடிவுகளை  இணையதள முகவரி மூலம், குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட ஐடி மற்றும் அவா்களின் செல்லிடப்பேசி எண்களை கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது, பரிசோதனை மேற்கொண்ட நபா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பை பயன்படுத்தி ஆன்ராய்டு செல்லிடப்பேசிகளில் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் பரிசோதனை செய்யப்பட்ட நேரத்திலிருந்து 96 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லத்தக்கது.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிசோதனை ஆய்வகம் மூலம் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் மட்டுமே மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தினசரி தரவேற்றம் செய்யப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com