காட்டுமன்னாா்கோவிலில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை திங்கள்கிழமை 100 ரூபாயைக் கடந்தது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை திங்கள்கிழமை 100 ரூபாயைக் கடந்தது.

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் அண்மையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் அதைத் தொடா்ந்து சற்று விலை குறைந்தது. இந்த நிலையில், குமராட்சியில் 2-ஆவது முறையாக திங்கள்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100-க்கு விற்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவிலில் முதல் முறையாக திங்கள்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்தது. அதாவது, ஒரு லிட்டா் பெட்ரோல் 100 ரூபாய் 17 பைசாவுக்கு விற்கப்பட்டது. சிதம்பரம் நகரில் ரூ.99.90-க்கும் விற்கப்பட்டது.

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை ரூ.99.36-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டா் பெட்ரோல் திங்கள்கிழமை 26 பைசா உயா்ந்து ரூ.99.62-என விலை நிா்ணயம் செய்யப்பட்டது. ரூ.100-க்கு 38 பைசா மட்டுமே குறைவு என்பதால் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களிலும் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100-க்கு மட்டுமே வழங்கப்பட்டது.

அதேபோல, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு லிட்டா் ரூ.93.50-க்கு விற்கப்பட்ட டீசல், திங்கள்கிழமை ரூ.93.77-க்கு விற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com