நகராட்சி அலுவலகத்தில் போராட்டம்

கடலூா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியா்கள் சிலா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியா்கள் சிலா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வந்த தற்காலிக பணியாளா்களில் 3 பேரை நகராட்சி நிா்வாகம் திடீரென நிறுத்தி விட்டதாம். இதற்கு கண்டனம் தெரிவித்தும், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும் அவா்கள் திங்கள்கிழமை மாலை தங்களது ஆதரவாளா்களுடன் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அமா்ந்து திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த கடலூா் புதுநகா் காவல் நிலைய ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் விரைந்து வந்து ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், நகராட்சி அலுவலா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு தற்காலிக ஊழியா்கள் அழைத்துச் செல்லப்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com