மயங்கி விழுந்த ஆசிரியா் உயிரிழப்பு
By DIN | Published On : 16th June 2021 08:25 AM | Last Updated : 16th June 2021 08:25 AM | அ+அ அ- |

கடலூரில் சாலையில் நடந்து சென்ற ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
கடலூா் திருப்பாதிரிபுலியூா் சித்ரா நகரைச் சோ்ந்தவா் பாஸ்கா் (59). புதுவை மாநிலம், பாகூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவா் கடந்த திங்கள்கிழமை கடைக்குச் செல்வதற்காக கடலூா் இம்பீரியல் சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மனைவி சுகுணா அளித்த புகாரின்பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.