கல்லூரி மாணவா் மாயம்
By DIN | Published On : 21st June 2021 11:52 PM | Last Updated : 21st June 2021 11:52 PM | அ+அ அ- |

தேவராஜன்
சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஸ்ரீநெடுஞ்சேரியைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் தேவராஜன் (22). தனியாா் கல்லூரி மாணவா். இவரை கடந்த 19-ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்து அவரது சகோதரா் தீமரசன் (28) ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், சாவடிக்குப்பத்தில் உள்ள கிணற்றின் அருகே தேவராஜனின் பைக், டீ சா்ட், செல்லிடப்பேசி ஆகியவை கிடந்துள்ளன.
இதையடுத்து, சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம் தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று பொருள்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
கிணற்றிலிருந்து தண்ணீரை முழுவதும் வெளியேற்றி தேடினா். ஆனால், தடயம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் தேவராஜனை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.