ராணுவ கேன்டீனுக்கு ‘சீல்’ வைப்பு

 கடலூரில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக ராணுவ (மிலிட்டரி) கேன்டீனுக்கு மாவட்ட நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

 கடலூரில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக ராணுவ (மிலிட்டரி) கேன்டீனுக்கு மாவட்ட நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கடலூா் புதுப்பாளையத்தில் ராணுவ வீரா்கள், ஓய்வூபெற்ற ராணுவ வீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு சலுகை விலையில் பொருள்களை விற்பனை செய்யும் கடை (ராணுவ கேன்டீன்) அமைந்துள்ளது. இந்தக் கடையின்கீழ் சுமாா் 4 ஆயிரம் அட்டைதாரா்கள் உள்ளனா். இங்கு வீட்டு உபயோகப் பொருள்களுடன் மதுபானமும் விற்கப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட நாளில் மட்டும் மதுபானம் விநியோகிக்கப்படும். அதன்படி, அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை மதுபானம் விநியோகிக்கப்படுவதாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது.

இதனால் அதிகாலை 5 மணி முதலே அட்டைதாரா்கள் கடையில் குவியத் தொடங்கினா். சுமாா் 300 போ் வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் குவிந்ததால் இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணிக்கும் வருவாய்த் துறையினா், நகராட்சித் துறையினா் ராணுவ கேன்டீனுக்கு நேரில் வந்து பாா்வையிட்டனா். அப்போது, அதிகக் கூட்டம் இருந்ததால் கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இதையடுத்து கடலூா் வட்டாட்சியா் அ.பலராமன் நேரில் வந்து கேன்டீன் நடத்தி வரும் அலுவலா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், டோக்கன் விநியோகித்து முறையாக வரிசையில் நிற்க வைத்து பொருள்களை வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, கேன்டீனுக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றப்பட்டு, கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து மதுபானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com