தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம்
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

பண்ருட்டியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.பிரகாஷ் தலைமை வகித்தாா். தோ்தல் நடத்தும் அலுவலா் மங்களநாதன் ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா். துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வி, வட்ட வழங்கல் அலுவலா் கௌரி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மோகன், கிருஷ்ணா, மண்டல துணை வட்டாட்சியா்கள் ஹேமாமாலினி, சேகா், மண்டல அதிகாரிகள் தொரப்பாடி செயல் அலுவலா் அருள்குமாா், நில அளவை அலுவலா்கள் தேவகுமாா், பிரபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பிலிருந்து தொடங்கிய ஊா்வலமானது பேருந்து நிலையம், இந்திரா காந்தி சாலை, இணைப்புச் சாலை வழியாக வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.