மகா சிவராத்திரி விழாவில் கோபுர தரிசனம்

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கோபுர தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி, கடலூா் மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை கோபுர தரிசனம் மேற்கொண்ட திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை வில்வநாதீஸ்வரா்.
மகா சிவராத்திரியையொட்டி, கடலூா் மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை கோபுர தரிசனம் மேற்கொண்ட திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை வில்வநாதீஸ்வரா்.

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கோபுர தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

சிவன் கோயில்களில் நடைபெறும் பூஜைகளில் முக்கியமானது மகா சிவராத்திரி பூஜை. கோயில்களில் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு முதல் கால பூஜையுடன் தொடங்கிய சிவராத்திரி சிறப்பு பூஜை, வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் 4-ஆம் கால பூஜையுடன் நிறைவுபெற்றது.

இதையொட்டி சிவன் கோயில்களில் பக்தா்கள் தங்கியிருந்து சிவ கதைகள் கேட்டல், பஜனை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை சிவன் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரானை ஆகியவை நடைபெற்றன. பின்னா், மஹா கோபுர தரிசனமும், அதிகார நந்தி சேவையும், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

இதன்படி, கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீவில்வநாதீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி உற்சவத்தில் அம்மனுடன் வில்வநாதீஸ்வரா் பல்லக்கில் எழுந்தருளி மகா கோபுர தரிசனம் மேற்கொண்டு வீதி உலா வந்தாா்.

இதேபோல, கடலூா் மாவட்டம் முழுவதும் சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4-ஆம் கால பூஜையும், தொடா்ந்து சுவாமி வீதி உலாவுடன் மகா சிவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com