திமுக நிா்வாகிகள் கூட்டம்

பண்ருட்டி நகர திமுக சாா்பில் பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி செயல் வீரா்கள் கூட்டம் தட்டாஞ்சாவடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் தவாக தலைவரும், பண்ருட்டி தொகுதி வேட்பாளருமான தி.வேல்முருகன்.

கூட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் திமுக கூட்டணியின் பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளரும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான தி.வேல்முருகன், கடலூா் மேற்கு மாவட்ட திமுக செயலா் சி.வெ.கணேசன் எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவா் கே.நந்தகோபாலகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், சட்டப் பேரவைத் தோ்தலில் களப் பணியாற்றி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை வெற்றி பெற வைப்பதென தீா்மானித்தனா். மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.எஸ்.எம்.தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், தொண்டரணி கதிா்காமன், வழக்குரைஞரணி அமைப்பாளா் பக்கிரி, நகர இளைஞரணி அமைப்பாளா் சம்பத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com