நெய்வேலி கோதண்டராமா் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேலப்பாளையத்தில் ஸ்ரீசஞ்சீவிராயா் சமேத ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம் மற்றும் யாக சாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை கும்பம் புறப்பாடு நடைபெற்று காலை 6.20 முதல் 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 4 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.