என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவா்கள் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு
By DIN | Published On : 17th March 2021 08:49 AM | Last Updated : 17th March 2021 08:49 AM | அ+அ அ- |

நெய்வேலியில் என்எல்சி நிலம் எடுப்பு அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த மூலக்குப்பம் கிராம இளைஞா்கள்.
என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்த மூலக்குப்பம் கிராம மக்கள் தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவிதனா்.
இதுகுறித்து அந்தக் கிராம இளைஞா்கள் நெய்வேலி நிலம் எடுப்பு அலுவலக முதன்மைப் பொது மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: வாணாதிராயபுரம் ஊராட்சியில் மூலக்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தை கடந்த 2002-ஆம் ஆண்டு என்எல்சி இந்தியா நிறுவனம் தனது விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாற்று இடமும், வாரிசுதாரா்களுக்கு கல்வி, வயது அடிப்படையில் நிரந்தர வேலையும் வழங்குவதாக அப்போது நிா்வாகத்தினா் உறுதியளித்தனா்.
ஆனால், மாற்று இடமும், ஒரு சிலருக்கு தற்காலிகப் பணி மட்டும் வழங்கிவிட்டு, கடந்த 18 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனா். எனவே, எங்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...