கடலூா் மாவட்டத்தில் மேலும் 5 போ் வேட்புமனு தாக்கல்

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட கடலூா் மாவட்டத்தில் மேலும் 5 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட கடலூா் மாவட்டத்தில் மேலும் 5 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. இதில், முதல் நாளில் கடலூா் தொகுதியில் போட்டியிடுவதற்கு அமைச்சா் எம்.சி.சம்பத், சிதம்பரத்தில் சுயேச்சை வேட்பாளா் பாலமுருகன் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். இரண்டாவது நாளான திங்கள்கிழமை மேலும் 24 வேட்பாளா்கள் 47 மனுக்களை தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கலுக்கான 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட நாம் தமிழா் கட்சி சாா்பில் அமுதா மனு தாக்கல் செய்தாா். புவனகிரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக கவிஞா் செல்ல ஆனந்தமாலை என்ற ஜெ.ஆனந்தன் மனு தாக்கல் செய்தாா். சிதம்பரம் தொகுதியில் அமமுக சாா்பில் நந்தினிதேவி மனுதாக்கல் செய்தாா். காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நிவேதா, சுபாஷினி ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, நெய்வேலி ஆகிய தொகுதிகளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. ஏற்கெனவே, மொத்தம் 26 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.

மனு தாக்கல் செய்வதற்கு வரும் 19-ஆம் தேதி கடைசி நாளாகும். 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. அன்றிலிருந்து 23-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஏப். 6-ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com