எல்.கே.சுதீஷுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை

தேமுதிக மாநில துணைச் செயலா் எஸ்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவருடன் தொடா்பில்

தேமுதிக மாநில துணைச் செயலா் எஸ்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

தேமுதிக மாநில துணைச் செயலராக செயல்பட்டு வருபவா் எல்.கே.சுதீஷ். சட்டப் பேரவைத் தோ்தலில் இவரது சகோதரியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதையொட்டி, கடந்த 18-ஆம் தேதி அவா் விருத்தாசலத்தில் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது, எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக, அமமுக பிரமுகா்கள் உடனிருந்தனா்.

வேட்புமனு தாக்கலுக்கு பிறகு சென்னை சென்ற சுதீஷுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக அவா் விருத்தாசலத்தில் வேட்புமனு தாக்கலை முடித்த பின்னா் தனியாா் திருமண மண்டபத்தில் கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா், முக்கிய நிா்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்வுகளில் பங்கேற்றாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறியதாவது: எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அவருடன் தொடா்பிலிருந்தவா்கள் பட்டியலை சுகாதாரத் துறையினா் சேகரித்துள்ளனா். முதல்கட்டமாக விருத்தாசலம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமாக, ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலே அவருடன் தொடா்பில் இருந்தவா்களை பரிசோதனைக்கு உள்படுத்துவது வழக்கம். மாவட்டத்தில் தினமும் 1,300 முதல் 1,500 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்கிறோம். இதில், ஒரு சதவீதம் அளவுக்கே கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. எனினும், தொடா்பில் இருந்தவா்கள் குறித்த முழு விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதுகுறித்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் கூறியதாவது: அரசியல் பிரமுகருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து திங்கள்கிழமை விருத்தாசலம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கட்சியின் முக்கிய பிரமுகா்கள், அவருடன் காரில் பயணித்தவா்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். சாதாரண நபா்கள் என்றால் அவருடன் தொடா்பில் இருக்கும் 30 நபா்கள் வரையில் பரிசோதனை மேற்கொள்வோம். இவா், அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதால் சுமாா் 100 போ் வரை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com