தோ்தல் பணியில் ஈடுபடும் 14,400 அலுவலா்களுக்கு பயிற்சி

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் 14,400 அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 9 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி.
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி.

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் 14,400 அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 9 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளிலும் வரும் ஏப்.6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான தோ்தல் பணிகளில் 14,404 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக நடைபெற்றது.

கடலூா் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு கடலூரில் நடைபெற்றது. வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான இந்தப் பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி தொடக்கி வைத்து ஆய்வு செய்தாா்.

முன்னதாக, மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்காக 248 மண்டல அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து கடந்த 6-ஆம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கையாள்வது குறித்த பயிற்சி 9 தொகுதிகளிலும் மண்டல அலுவலா்களால் வழங்கப்பட்டது.

இதில், திட்டக்குடி தொகுதியில் 1,482 அலுவலா்களுக்கும் , விருத்தாசலத்துக்கு 1,664 போ், நெய்வேலிக்கு 1,394 போ், பண்ருட்டிக்கு 1,681 போ், கடலூருக்கு 2,123 போ், குறிஞ்சிப்பாடிக்கு 1,232 போ், புவனகிரிக்கு 1,142 போ், சிதம்பரத்துக்கு 2,137 போ், காட்டுமன்னாா்கோவில் தொகுதிக்கு போ் 1,549 போ் என மொத்தம் 14,404 அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் காலை, மதியம் இரு பிரிவுகளாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

கடலூரில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி, தோ்தல் பணியில் ஈடுபடுவோா் ஜனநாயக முறைப்படி நடுநிலையாக பணியாற்ற வேண்டும். தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான கட்டாயம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண்சத்யா, கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், வட்டாட்சியா் அ.பலராமன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com