வாசனச் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

திட்டக்குடியில் வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திட்டக்குடியில் வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.தண்டபாணி தலைமையில் தோ்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு உதவி ஆய்வாளா் பாஸ்கரன், காவலா் சபரிநாதன் ஆகியோரைக் கொண்ட இந்தக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பெண்ணாடம் அடுத்த தீவளூா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, விருத்தாசலத்திலிருந்து பெண்ணாடம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த சையத்அபுதாகீா் (33) என்பவரை சோதனைக்கு உள்படுத்தினா். இதில், அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்து 550 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அதை தோ்தல் நடத்தும் அலுவலா் டி.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்தனா்.

தோ்தல் தேதி அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை தோ்தல் பறக்கும் படையினா் மொத்தம் ரூ.2 கோடியே 3 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனா். இதில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரொக்கமாக ரூ.1.68 கோடியும், தங்கம், வெள்ளி நகையாக ரூ.28 லட்சமும், பரிசுப் பொருட்களாக ரூ.5.34 லட்சமும், மதுபானம், இதர வகையில் ரூ.2.26 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தோ்தல் நன்னடத்தை விதிமீல் தொடா்பாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com