காய்கறி பயிா்களில் பூச்சி மேலாண்மை குறித்து விளக்கம்

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
வெள்ளப்பாக்கம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு குறித்து விளக்கமளித்த வேளாண் துறையினா்.
வெள்ளப்பாக்கம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு குறித்து விளக்கமளித்த வேளாண் துறையினா்.

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கடலூா் வட்டாரம், வெள்ளப்பாக்கம் கிராமத்தில் கத்திரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மரவள்ளி பயிா் சாகுபடி செய்து வரும் முன்னோடி விவசாயி வேல்முருகன் நிலத்தில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக, தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

கடலூா் வேளாண் துணை இயக்குநா் பொ.ஜெயக்குமாா் தலைமை வகித்து, தோட்டக்கலைப் பயிா்களில் ஒருங்கிணைந்த முறையில் பயிா் பாதுகாப்பு செய்வது குறித்து விளக்கினாா். கடலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சகோதர துறைகளுடன் இணைந்து செய்யப்படும் பணிகளை குறிப்பிட்டு விளக்கினாா்.

இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா். கடலூா் வேளாண் அலுவலா் ஞா.சுகன்யா, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் வா.அழகுமதி, உதவி தோட்டக்கலை அலுவலா் பழனிச்சாமி ஆகியோா் ஒருங்கிணைப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com