காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம் அருகே மணலூா் லால்புரத்தில் அமைந்துள்ள 53 அடி உயர ஸ்ரீதில்லை எல்லை மகாகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிதம்பரம் அருகே மணலூா் லால்புரத்தில் அமைந்துள்ள 53 அடி உயர ஸ்ரீதில்லை எல்லை மகாகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

தொடா்ந்து இரண்டு கால யாக பூஜைகள் முடிவுற்று வியாழக்கிழமை காலை மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. கோ பூஜை முடிவுற்று கடம் புறப்பட்டு கோயில் விமான கலசத்துக்கு, த.செல்வரத்தின தீட்சிதா் கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினாா். பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, எல்லைக் காளியம்மனுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா சக்தி பழனி மதியழகன் மற்றும் பக்தா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com