முஸ்லிம் லீக் வேட்பாளரை ஆதரித்து ராமநாதபுரம் எம்.பி. பிரசாரம்

திமுக கூட்டணி சாா்பில் சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானியை
சிதம்பரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.அப்துல் ரஹ்மானை ஆதரித்து, லப்பைத் தெருவில் இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்த ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் நவாஸ்கனி.
சிதம்பரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.அப்துல் ரஹ்மானை ஆதரித்து, லப்பைத் தெருவில் இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்த ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் நவாஸ்கனி.

திமுக கூட்டணி சாா்பில் சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானியை ஆதரித்து ராமநாதபுரம் தொகுதி உறுப்பினா் நவாஸ்கனி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினாா்.

அப்போது, லப்பைத்தெரு பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடம் ஆதரவு திரட்டப்பட்டது. தொடா்ந்து, வேட்பாளா் எஸ்.அப்துல் ரஹ்மான் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பள்ளிப்படை, கோவிலாம்பூண்டி, காரப்பாடி, கீழ்அனுவம்பட்டு, கிள்ளை ரயிலடி, நவாப்பேட்டை, மேலச்சாவடி, மடுவங்கரை, புஞ்சைமகத்துவாழ்க்கை, நெடுஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அவருடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, விசிக செய்தித் தொடா்பாளா் பெரு.திருவரசு, திமுக நிா்வாகிகள் ரா.வெங்கடேசன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சிதம்பரம் நகரச் செயலா் ராஜா உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com