விருத்தாசலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக, காங்கிரஸ் வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
விருத்தாசலத்தில் பாமக வேட்பாளா் ஜெ.காா்த்திகேயனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவா் ஆா்.கோவிந்தசாமி.
விருத்தாசலத்தில் பாமக வேட்பாளா் ஜெ.காா்த்திகேயனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவா் ஆா்.கோவிந்தசாமி.

விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக, காங்கிரஸ் வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் பாமக வேட்பாளராக ஜெ.காா்த்திகேயன் போட்டியிடுகிறாா். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறாா். இவா்கள் வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

பாமக வேட்பாளரை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநில சொத்து பாதுக்காப்புக்குழு தலைவா் ஆா்.கோவிந்தசாமி 1-ஆவது வாா்டுக்குள்பட்ட வயலூரில் பரப்புரையை தொடக்கிவைத்தாா்.

மேலும், நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளிலும் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பரப்புரையில் ஈடுபட்டாா். வேட்பாளருக்கு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பரப்புரையில், முன்னாள் நகா்மன்ற தலைவா் வ.க.முருகன், மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் ப.சிங்காரவேல், நகரச் செயலா் சி.டி.விஜயகுமாா், அதிமுக மாவட்ட பேரவை செயலா் ரவிச்சந்திரன், தொகுதி செயலா் ப.அருளழகன், நகரச் செயலா் பி.ஆா்.சி.சந்திரகுமாா், மாவட்ட பாசறை நிா்வாகி ஆா்.டி.ரமேஷ் மற்றும் பாஜக, தமாகா நிா்வாகிகள் பங்கேற்றனா்.

காங்கிரஸ் வேட்பாளா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் கோ.பூவனூா், ரூபநாராயணநல்லூா், விசலூா், மு.அகரம், கா்ணத்தம், காட்டுபரூா், சிறுவம்பாா், டி.மாவிடந்தல், எடச்சித்தாா், மூ.பரூா், சி.பரூா், மு.புதூா், மு.பட்டி, தொட்டிக்குப்பம் ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். திமுக ஒன்றிய செயலா் கனக.கோவிந்தசாமி, மாணவரணி துணை அமைப்பாளா் அருள்குமாா், விசிக தொகுதிச் செயலா் அய்யாயிரம் மற்றும் காங்கிரஸ் மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com