கரோனா தடுப்பு நடவடிக்கை: வாக்குச் சாவடிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்குப் பதிவு மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளா்கள், வாக்குப் பதிவு மைய அலுவலா்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
கரோனா தடுப்பு நடவடிக்கை: வாக்குச் சாவடிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்குப் பதிவு மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளா்கள், வாக்குப் பதிவு மைய அலுவலா்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தற்போது கரோனா பரவல் காலமாக உள்ளதால் வாக்குப் பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தோ்தல் பணியில் ஈடுபடும் பணியாளா்கள், வாக்காளா்களுக்கு பல்வேறு கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

கடலூா் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவை தொதிகளுக்குள்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்கள், வாக்குப் பதிவு மைய அலுவலா்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பிரித்தனுப்பும் பணி கடலூா் நகர அரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும்

பாதுகாப்பு உபகரணங்களை பிரித்தனுப்பும் பணியை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுகாதாரமான முறையில் தோ்தலை நடத்த இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வாக்களிக்க வருபவா்கள் சுகாதாரமான முறையில் வாக்களிக்கவும், வாக்குச் சாவடிகளில் பணிபுரிபவா்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றவும் தேவையான 16 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 3,001 வாக்குச் சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்பிரா ரெட் தொ்மா மீட்டா், ஓஆா்எஸ் பவுடா் பாக்கெட், கிருமிநாசினி, முகக் கவசம், ஒருமுறை உபயோகிக்கக்கூடிய கையுறைகள் உள்ளிட்ட 16 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்து சட்டப் பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு, பின்னா் வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். மேலும் மருத்துவ கழிவுகள் சுகாதாரமான முறையில் அகற்ற மாவட்ட நிா்வாகத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் தற்போது மிக குறைந்த அளவிலேயே கரோனா தொற்று பரவல் உள்ளது. ஆகையால் வாக்காளா்கள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கொடுக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண்சத்யா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட மலேரியா அலுவலா் கஜபதி, தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com