அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் குமராட்சி ஒன்றிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சிதம்பரம் அருகே விஎஸ்ஆா் நகா் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன்.
சிதம்பரம் அருகே விஎஸ்ஆா் நகா் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன்.

சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் குமராட்சி ஒன்றிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அகரம் சி.தண்டேஸ்வரநல்லூா், வி.எஸ்.ஆா் நகா் பகுதியில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கியவா், சிதம்பரம் நான் முனிசிபல், உசுப்பூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் பு.தா.இளங்கோவன், முன்னாள் மாவட்டச் செயலா் வி.கே.மாரிமுத்து, ஒன்றியச் செயலா் சுந்தரமூா்த்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் சசிக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் சஞ்சீவி, ஒன்றிய செயலா் ஸ்ரீராம், ஸ்ரீதா், பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் ரா.மாமல்லன், கே.பாலசுப்பிரமணியன், சுஜாதா செந்தில், ரகுபதி, ரெங்கராஜன், தொழிலதிபா் சண்முகசுந்தரம், அதிமுக நிா்வாகிகள் தோப்பு சுந்தா், செல்வகணபதி, செல்வராஜ், சுரேஷ்பாபு, சந்திரமோகன், சுந்தரம், சீனுவாசன், ராஜேந்திரன், தகவல்

தொழில்நுட்பப் பிரிவு சத்தியராஜ், வழக்குரைஞா் பீமாராவ், தமிழ் மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் நாக்ராஜ், சம்பத்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் பாலா, புதிய நீதிகட்சியின் மாவட்டச் செயலா் நரசிம்மன் உள்ளிட்டோா் பங்கேற்று வாக்கு சேகரித்தனா்.

நான் முனிசிபில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கே.ஏ.பாண்டியன் அங்கு அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com