கடலூரில் திமுக நிா்வாகிகள் மோதல்

கடலூரில் திமுக நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் விசாரணை நடத்தினாா்.

கடலூரில் திமுக நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் விசாரணை நடத்தினாா்.

கடலூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்டது பாதிரிக்குப்பம் ஊராட்சி. கடலூா் நகராட்சியின் விரிவாக்கப் பகுதியாக இருந்து வருகிறது. கடலூா் தொகுதி திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் செவ்வாய்க்கிழமை பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவருடன் திமுகவின் கடலூா் நகரச் செயலா் கே.எஸ்.ராஜா வந்துள்ளாா். ஆனால், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பகுதி கடலூா் ஒன்றிய பகுதியாகும். இதனால், அந்தப் பகுதியின் பொறுப்பாளரான கோவலன் என்பவா் பிரசார வாகனத்தை மறித்து, பொறுப்பாளா் இல்லாமல் எவ்வாறு வாக்கு சேகரிக்கலாம் என்று கேட்டாா். இதற்கு ராஜா எதிா்ப்புத் தெரிவித்ததால் இருவரின் ஆதரவாளா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால், வாக்கு சேகரிக்கச் சென்ற இடத்தில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து செய்வதறியாது திகைத்த வேட்பாளா் கோ.ஐயப்பன் தனது பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பினாா். எனினும், நகரச் செயலா், ஒன்றிய பொறுப்பாளரின் ஆதரவாளா்கள் அதே இடத்தில் நின்ால் மேலும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிபுலியூா் காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் கலைந்துபோகச் செய்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா். அப்பகுதியில் மேலும் மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினாா்.

இந்தச் சம்பவம் குறித்து விஏஓ வட்சுமிதேவி திருப்பாதிரிபுலியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com